உள்ளாட்சி அமைப்புகளில் துணைத் தலைவர் பதவிகளுக்கு இடஒதுக்கீடு அரசாணையை உடனே வெளியிட வேண்டும் – தொல். திருமா கோரிக்கை.

Ullaatchi Thunai thalaivar paravikalil Ida Othukkeedu – Thol. Thiruma Arikkai

உள்ளாட்சி தேர்தல் – விசிக வெற்றி – தொல். திருமாவளவன் அறிக்கை

Ullaatchi Therthal – VCK Vettri – Thol. Thiruma Arikkai

உள்ளாட்சிமன்ற தேர்தலில் விசிக வெற்றிபெற்ற விபரம்:

1.திருவேற்காடு நகராட்சி : விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் ஒருவர் நகராட்சி கவுன்சிலராக வெற்றி

2.கோவை மேயர்-வி.சி கூட்டணிக்கு 3வது இடம்

3.ஈரோடு நகராட்சி : விடுதலைச் சிறுத்தைகள் இரண்டு இடங்களில் வெற்றி.

4.நகராட்சி தேர்தல் முடிவுகள் : கோயம்புத்தூர் 1 , கடலூர் 4 , திருவண்ணாமலை 6 , விழுப்புரம் :2 இடங்களில் விடுதலை சிறுத்தைகள் வெற்றி பெற்று உள்ளது.

5.சிதம்பரம் நகராட்சி – ஒன்றவாது வார்டில் விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் தியாகு வெற்றி

. 6.கடலூர் மாவட்டம் – ஒன்றிய குழு உறுப்பினர் பதிவியில் விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் ஞானசேகரன் வெற்றி .

7.கடலூர் நகராட்சி – முடிவுகள் வெளியானதில் விடுதலை சிறுத்தைகள் 3 வார்டுகளில் வெற்றி . 8.நெல்லிக்குப்பம் நகராட்சி – விடுதலை சிறுத்தைகள் 6 வார்டுகளில் வெற்றி .

9.திருவண்ணாமலை நகராட்சி – இரண்டு வார்டுகளில் விடுதலைச் சிறுத்தைகள் வெற்றி.

10.விடுதலைச் சிறுத்தைகள் கட்சிசார்பில் கடலூர் நகரமன்ற 4 வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட பில்லா (எ)நெடுஞ்சேரலாதன் வெற்றி பெற்றார் .

11.சென்னை பள்ளிகரணை ஊராட்சி மன்ற தலைவராக பன்னீர் தாஸ் வெற்றி.

12.மதுரை  தொட்டப்ப நாயகனூர் ஊராட்சி
மன்ற தலைவராக பெரிய கருப்பன் வெற்றி.

13.விருதுநகர் – கரியபட்டி பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் ஒருவர் ஒன்றிய கவுன்சிலராக தேர்ந்தெடுக்க பட்டுள்ளார் ..

14.ஈரோடு மாநகராட்சி தேர்தல் : விடுதலைச் சிறுத்தைகள் சார்பாக போட்டியிட்ட விநாயகமூர்த்தி . என் (VCK) 1217 votes மாமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார்.

15.மதுரையில் இரண்டு ஒன்றிய கவுன்சிலர்கள் வெற்றிபெற்றுள்ளனர்.

16.தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் ஒரு ஒன்றிய கவுன்சிலர் ,ஒரு பஞ்சாயத்து தலைவர் வெற்றிபெற்றுள்ளனர்.

சென்னையில் தேர்தல் பிரச்சாரம்

எழுச்சித்தமிழர் தொல்.திருமா அவர்கள் இன்று சென்னையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். காலை போரூரில் துவங்கி சென்னையின் பல பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
எழுச்சித்தமிழர் அவர்களுக்கு மக்கள் சிறப்பான வரவேற்பளித்தனர்.

போட்டியிடாத இடங்களில் விடுதலை சிறுத்தைக்கு பாமக ஆதரவு

சிதம்பரம் : உள்ளாட்சி தேர்தலில் பாமக போட்டியிடாத இடங்களில் வி.சிறுத்தைகள் கட்சிக்கு ஆதரவு தருவோம் என டாக்டர் ராமதாஸ் கூறினார். சிதம்பரத்தில் நேற்று டாக்டர் ராமதாஸ் அளித்த பேட்டி: உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டை உறுதிபடுத்தும் வகையில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை உள்ளது. வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 15 வகையான ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது முறைகேடுகளுக்கு வழி வகுக்கும்.

பாமக போட்டியிடாத இடங்களில் விடுதலை சிறுத்தைகளுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். அதிமுக ஆட்சியில் விலைவாசி 40 சதவீதம் உயர்ந்துள்ளது. தற்போது மின் தட்டுபாடு அதிகமாக உள்ளது. கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது என்றார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ஆசிட் ஊற்றி, கழுத்து வெட்டப்பட்டு கொலை.

சீர்காழி: உள்ளாட்சித் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்யிடும் வேட்பாளர் ஒருவர் முகத்தில் ஆசிட் ஊற்றப்பட்டும், அரிவாளால் வெட்டப்பட்டும் கொலை செய்யப்பட்டார்.

நாகை மாவட்டம் சீர்காழி தாலுகா மேலசாலை கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ன கட்டையன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச்சார்பில் காரைமேடு ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

மேலும், மேலசாலை கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிடும் வனிதாவுக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்றிரவு இவர் ஒரு வாய்க்கால் அருகே கழுத்து வெட்டிப்பட்டு, முகத்தில் ஆசிட் ஊற்றி கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொலையாளிகளைக் கைது செய்யக் கோரி அவரது கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சீர்காழி- தரங்கம்பாடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

.எழுச்சித்தமிழர் அவர்கள் இச்சம்பவத்தை கேட்டு   மனவேதனைப்பட்டார்.

எழுச்சித்தமிழர் தொல்.திருமா அவர்கள் சேலம் ,அரூர்,ஊத்தங்கரை ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்தார்.

எழுச்சித்தமிழர் தொல்.திருமா அவர்கள் இன்று தேர்தல் பிரச்சாரமாக சேலம் ,அரூர்,ஊத்தங்கரை ஆகிய இடங்களில் நமது வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.இரவு வேலூரில் பிரச்சார பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அனைத்து இடங்களில் எழுச்சித் தமிழரை மக்கள்  சூழ்ந்து கொண்டதனால்  ஒவ்வொரு இடத்திலும் பேசிவிட்டு விடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டு எழுச்சித்தமிழர்  அவர்களால்  பொதுகூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை . நாளை 13/10/11 சென்னையில் தேர்தல் பிரச்சாரம்  மேற்கொள்கிறார்.இரவு பிரச்சார பொதுகூட்டதிலும் பங்கேற்கிறார்.

திருமா அவர்கள் 12/10/11 நாளை சேலம்,தருமபுரி,கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டத்தில்பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

எழுச்சித்தமிழர் தொல்.திருமா அவர்கள் நாளை 12/10/11 தேர்தல் பிரச்சாரமாக சேலம்,தருமபுரி,கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டத்தில் சேலத்தில் நமது மேயர் வேட்பாளரை ஆதரித்தும் ,மாமன்ற உறுப்பினர்களை ஆதரித்தும்
பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

எழுச்சித்தமிழர் அவர்கள் கோவையில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

எழுச்சித்தமிழர் தொல்.திருமா அவர்கள் இன்று கோவையில் பிரசார பயணம்
மேற்கொண்டார் . அவர் கோவை மாநகரம் முழுவதும் சுமார் 6 மணி நேரம்
தொடர்ந்து நின்றுகொண்டே நமது கூட்டணி சார்பில் மேயர் பதவிக்கு
போட்டியிடும்  அமீர் அல்டாப் அவர்களை ஆதரித்தும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் போட்டியிடும் 16 மாமன்ற உறுப்பினர்களை ஆதரித்தும்பிரச்சாரம் மேற்கொண்டார்.எழுச்சித் தமிழர் பிரச்சாரத்தில்
பேசும்பொழுது கோவை மாநகரத்தை தூய்மை மாநகரமாக மாற்ற எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று பொதுமக்களை பார்த்து பேசினார்.மாலையில் திருப்பூரில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.இரவு
மக்கள் சனநாயக  கூட்டணி சார்பில் ஈரோட்டில் பிரசாரப்பொது கூட்டம் நடைபெறுகிறது.

 

தூத்தூகுடி மற்றும் நெல்லையில் எழுச்சித்தமிழர் தீவிர பிரசாரம்

தூத்தூகுடி மற்றும் நெல்லை மேயர்  வேட்பாளர்கள் மற்றும் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு போட்டியிடும்  விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர்களை ஆதரித்து அக்டோபர் 9 அன்று  தூத்தூகுடி மற்றும் நெல்லை மாவட்டத்தில் எழுச்சித்தமிழர் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். thalaivarஎழுச்சித்தமிழர் பேசுகையில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்கவும் வரியில்லா இலவச குடிநீர் வழங்கவும்  விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர்களை ஆதரிக்குமாறு     கேட்டுக்கொண்டார்.

Follow

Get every new post delivered to your Inbox.